குலசேகரன்பட்டினத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2023-10-16 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு சந்தையடியூர் தசரா குழு சார்பில் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரைக்கு செல்லும் வழியில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதிகாலை முதல் தொடர்ந்து பக்தர்களுக்கு டிபன் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது. அன்னதானத்தை சந்தைடியூர் ஊர் தலைவர் மால்.வாசுதேவன் தொடங்கி வைத்தார். இதில் தசரா குழு நிர்வாகிகள் சிவக்குமார், முத்துப்பாண்டி, சித்திரவேல், கார்த்திசன், கணேசன், முத்துபிரகாஷ், மகேஷ் வேலையா, தனசிங், யூனியன் தலைவர் பாலசிங், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்