கொம்மடிக்கோட்டை கல்லூரியில்வேலைவாய்ப்பு வழிகாட்டல் பயிற்சி

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-08-08 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே கொம்மடி கோட்டை சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவல்துறை வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டல் பயிற்சி நடந்தது. கல்லூரியின் முதல்வர் அருள்ராஜ் பொன்னுத்துரை தலைமை தாங்கினார். வணிகவியல் துறை பேராசிரியர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஒருங்கிணைப்பாளர் மதுமிதா வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் மகேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபிக், மாவட்ட தனிப்படை குற்றப்பிரிவு காவலர் சுபராஜன் ஆகியோர் காவல்துறை வேலைவாய்ப்பு பற்றி மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான மாணவர்கள் பங்குபெற்று தங்கள் சந்தேகங்களை தெரிவித்து பயன் அடைந்தனர். மாணவி முத்து பிரியா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்