கரூர் மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.102.92, டீசல் ரூ.94.55-க்கு விற்பனை

கரூர் மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.102.92, டீசல் ரூ.94.55-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-05-22 18:29 GMT

கரூர்,

பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு

கரூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந்தேதி பெட்ரோல் லிட்டர் 111 ரூபாய் 14 காசுக்கும், டீசல் லிட்டர் 101 ரூபாய் 25 காசுக்கும், விற்பனையானது. தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் கடந்த 41 நாட்களாக விலை ஏதும் மாற்றம் இல்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனையானது.

இந்த நிலையில் மத்திய அரசு திடீரென பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால் கரூர் மாவட்டத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 8 ரூபாய் 22 காசு குறைந்து, 102 ரூபாய் 92 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் 70 காசு குறைந்து, 94 ரூபாய் 55 காசுக்கும் விற்பனையானது. இதனால் கரூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மகிழ்ச்சி அளிக்கிறது

கரூர் இளையபெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்த வி.இளையராஜா கூறுகையில்:-தற்போதைய காலகட்டத்தில் வாகனங்கள் மிக அத்தியாவசியமான தேவையாக உள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த காலங்களில் கிடுகிடுவென உயர்ந்து மக்களை அச்சுறுத்தி வந்ததது. இந்தநிலையில் தற்போது மத்திய அரசு கலால் வரி மூலம் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இன்னும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை, என்றார்.

விலை நிர்ணயித்து...

கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த மணிமாறன் கூறுகையில்:-பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் வருவாயில் ஒரு பகுதியை செலவிட வேண்டிய நிலை இருந்தது. தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இனிவரும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல் விலை நிர்ணயித்து தொடர்ந்து வழங்க வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்