புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டுகளில்வீர, தீர செயல்புரிந்த குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டுகளில் வீர, தீர செயல்புரிந்த குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

Update: 2023-08-17 19:02 GMT

மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் 2024-ம் ஆண்டிற்கான பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சுற்றுச்சூழல், சமூகசேவை போன்ற துறைகளில் வீர, தீர செயல்புரிந்த குழந்தைகளுக்கு மத்திய அரசால் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. எனவே தகுதியுள்ள 18 வயதிற்குட்பட்ட இந்திய குடிமகனாக இருக்கும் குழந்தைகள் https://awards.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 31-ந் தேதி மாலைக்குள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தகவல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்