தேனியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்

தேனியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.

Update: 2023-06-12 18:45 GMT

தேனி பங்களாமேடு டி.பி. மேற்குத்தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 44). இவர் ஒரு நகைப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை அவர் வசித்து வந்த வீட்டுக்குள் இருந்து தூர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டின் கதவை தட்டினர். கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. நீண்டநேரமாக கதவு திறக்கப்படாததால் பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது குமார் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த தகவல் அறிந்ததும் தேனி போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குமாரின் அண்ணன் ராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த குமார் திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்