அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும்வண்டல், கரம்பை மண் அள்ள அனுமதிக்கான சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் வண்டல், கரம்பை மண் அள்ள அனுமதிக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடக்கிறது.

Update: 2023-03-30 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் வண்டல்மண், கரம்பை மண் அள்ள அனுமதி பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 564 குளங்கள், கண்மாய்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்களில் விவசாய பயன்பாட்டுக்காக விவசாயிகள் வண்டல் மற்றும் கரம்பை மண் அள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகளின் நலன் கருதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. வண்டல் மண் மற்றும் கரம்பைமண் பெற விரும்பும் விவசாயிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் தங்கள் பெயரில் அல்லது விவசாயம் செய்பவரின் பெயரில் உள்ள கிராம கணக்குகளின்படி நிலங்கள் உள்ளது என்பதற்கான ஆதாராக கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும். தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் மண் பரிசோதனை அறிக்கை பெற்று, அதன்அடிப்படையில் டிராக்டர் மூலம் பகல் நேரத்தில் மட்டும் வண்டல், கரம்பை மண் எடுத்துக் கொள்ளலாம்.

ஆன்லைன் பதிவு

மேலும் வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் அடிப்படை விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதில் பதிவேற்றம் செய்வதால், அனைத்து திட்டங்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற முடியும். இந்த பணியும் நடந்து வருகிறது. நாளை (சனிக்கிழமை) நடைபெறும் சிறப்பு முகாமில் விவசாயிகள் ஆவணங்களை சமர்ப்பித்து GRAINS இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்