கோடை மழையால் பதநீர் இறக்கும் தொழில் பாதிப்பு

அதிராம்பட்டினம் பகுதியில் பெய்து வரும் கோடை மழையால் பதநீர் இறக்கும் தொழில் பாதிப்பு அடைந்து உள்ளது.

Update: 2022-05-18 20:31 GMT

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் பகுதியில் பெய்து வரும் கோடை மழையால் பதநீர் இறக்கும் தொழில் பாதிப்பு அடைந்து உள்ளது.

பதநீர் இறக்கும் ெதாழில்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மீன்பிடித்தொழில் மற்றும் உப்பு உற்பத்தி தொழில் தீவிரமாக நடந்து வருகி்றது. அதிராம்பட்டினம் பகுதியை சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.

இந்த பனை மரங்களில் இருந்து ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் சித்திரை மாதம் வரையிலும் பதநீர் இறக்கும் தொழில் தீவிரமாக நடைபெறும். இந்த ஆண்டும் பதநீர் இறக்கும் தொழில் மும்முரமாக நடந்து வந்தது.

கோடை மழையால் பாதிப்பு

இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பதநீர் இறக்கும் தொழில் பாதிப்பு அடைந்து உள்ளது.

இது குறித்து பதநீர் இறக்கும் தொழிலாளி ஒருவர் கூறியதாவது:-

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் பதநீர் உற்பத்தி செய்யும் சீசன் பங்குனி தொடங்கி சித்திரை மாதம் வரையிலும் இருக்கும். தற்போது சீசன் தொடங்கி 2 மாதம் கடந்து விட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கோடைமழையால் பதநீர் இறக்கும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.

கலயத்தில் சேரும் மழைநீர்

பனைமரங்கள் மீது ஏறி நன்கு வளர்ந்து நிற்கும் பாலை பகுதியில் சுண்ணாம்பு தடவப்பட்ட மண்பாண்ட கலயத்தை பனை மரத்தில் கட்டி தொங்க விட்டு விடுவோம். கலயத்திற்குள் விடப்பட்டு உள்ள பாலைக்கு அருகில் வளர்ந்து நிற்கும் பனை ஓலைகளை வெட்டி விடுவோம். ஒரு நாளைக்கு 3 முறை இந்த கலயம் கட்டி விடப்பட்டுள்ள பனை மரத்தின் பாலையை வெட்டி சீவி விடுவோம். ஒரு நாள் கழித்து பனை மரத்தில் ஏறி கலயத்தில் சேர்ந்திருக்கும் பதநீரை சேகரித்து அதை விற்பனை செய்வோம். ஆனால் தற்போது மழை விட்டு, விட்டு பெய்து வருவதால் பதநீர் இறக்கும் கலயத்தில் மழைநீர் சேர்ந்து விடுவதால் பதநீர் இறக்கும் தொழில் பாதிப்படைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்