ஒரே நாளில் 4 கோவில்களில் குடமுழுக்கு

பூம்புகாரில் ஒரே நாளில் 4 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-03-13 18:45 GMT

திருவெண்காடு:

பூம்புகாரில் ஒரே நாளில் 4 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பணிகள்

பூம்புகார்- கீழையூர் கிராமத்தில் தர்ம விநாயகர், காளியம்மன், அய்யனார் மற்றும் மகா மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு அகற்கான திருப்பணிகள் நடந்தது.

திருப்பணிகள் முடிந்த நிலையில் நேற்று குடமுழுக்கு நடந்தது.முன்னதாக விநாயகர் பூஜை, அங்குரார்பணம், கட ஸ்தாபனம், யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை 4-வது கால யாகசாலை பூஜையும், கோமாதா பூஜை, லட்சுமி பூஜை, பரிகார பூஜைகள் நடந்தது.

குடமுழுக்கு

இதையடுத்து கோவில் அர்ச்சகர் ரஜினிகாந்த் சிவாச்சாரியார் தலைமையில், யாகசாலையில் பூஜை செய்து வைக்கப்பட்டிருந்த யாக குடங்களை மேளதாளம் முழங்க 4 கோவில்களுக்கும் கொண்டு சென்றனர்.

முதலில் தர்ம விநாயகர் கோவில் கோபுரகலசத்தில், புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து காளியம்மன், அய்யனார் மற்றும் மகா மாரியம்மன் கோவில்களின் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.

திரளான பக்தர்கள் பங்கேற்பு

இதில் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் சாமி வீதிஉலா நடந்தது.

குடமுழுக்கு விழாவையொட்டி பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கீழையூர் கிராம பொறுப்பாளர்கள், பக்தர்கள், விழாகுழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்