இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
கோட்டூரில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் உள்ள பள்ளி வாசலில் இஸ்லாமியர்களின் மத நல்லிணக்கமாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன் தலைமை தாங்கினார். திருமருகல் தி.மு.க.தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி, நாகை நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஹாஜா நிஜாமுதீன், மோகன், ராஜீவ்காந்தி மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.