அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை நான் தொடங்கிவிட்டேன்- சசிகலா

நான் யார் பக்கமும் இல்லை, அனைவருக்கும் பொதுவான நபராக செயல்படுகிறேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-23 06:38 GMT

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா பங்கேற்றார். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா ஆதரவற்றோருக்கு புத்தாடைகள், கேக் உள்ளிட்டவைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

நான் யார் பக்கமும் இல்லை, அனைவருக்கும் பொதுவான நபராக செயல்படுகிறேன். நான் இருக்கும் வரை அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடையமாட்டார்கள். அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை நான் தொடங்கிவிட்டேன். அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். தனக்கு பின்னால் யார் வந்தால் நன்றாக இருக்கும் என ஜெயலலிதாவுக்கு தெரியும். சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என ஜெயலலிதா தான் மருத்துவர்களிடம் சொன்னார்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்