முட்டை உடைவதை கட்டுப்படுத்துவது எப்படி?
முட்டை உடைவதை கட்டுப்படுத்த கோழி தீவனத்தில் எரிசக்தியின் அளவை அதிகரிக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முட்டை உடைவதை கட்டுப்படுத்த கோழி தீவனத்தில் எரிசக்தியின் அளவை அதிகரிக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு இல்லை
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
அடுத்த 3 நாட்கள் வானம் தெளிவாக காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 60.8 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 4,4,6 கி.மீ.வேகத்தில் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும், அதிகபட்சமாக 90 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் வெப்ப அளவுகள் குறைந்து காணப்படும். இந்த மாதத்தில் கோழிகளில் தீவன எடுப்பை கட்டுப்படுத்துவதும், முட்டை உடைவதை கட்டுப்படுத்துவதும் மிகவும் சவாலானதாகும். தீவனத்தில் ஜீரணிக்கும் எரிசக்தி அளவை உயர்த்தி 2,600 கலோரிக்கு குறையாமலும், அதிகபடியான வைட்டமின் டி-3 கொடுப்பதும் அவசியம் ஆகும்.
தோல் கழலை நோய்
தற்போது மாடுகளை தாக்கும் தோல் கழலை நோய் மற்றும் பெரியம்மை நோய் என்னும் நச்சுயிரி நோய் நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக காணப்படுகின்றன. நோய் பாதிக்கப்பட்ட மாடுகளை கடித்த கொசு மற்றும் கடிக்கும் ஈக்கள் மற்றும் உண்ணிகள் மன்ற மாடுகளை கடிக்கும் போது மற்ற கால்நடைகளுக்கு எளிதாக பரவும் சூழல் நிலவுகிறது
பாதிக்கப்பட்ட மாடுகளில் 2, 3 நாட்களுக்கு லேசான காய்ச்சல், அதன்பின் தோலுக்கு அடியில் சிறிய கழலை போன்ற கட்டிகளும் காணப்படும். சில நாட்கள் கழித்து இந்த கட்டிகள் உடைந்து சீல் மற்றும் ரத்தம் வடியும் புண்ணாக மாறி மாடுகளுக்கு அசவுகரித்தை ஏற்படுத்தும். எனவே பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு அறிகுறிகள் தோன்றியவுடன் எந்த தாமதமும் இன்றி தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரை அணுகி உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.