தரகம்பட்டியில் சூறைக்காற்றுடன் கனமழை
தரகம்பட்டியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
கடவூர் தாலுகா தரகம்பட்டி பகுதியில் கடந்த நில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் இருண்டு காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ½ மணி நேரம் பெய்த கன மழையினால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.