ராமேஸ்வரத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை

ராமேஸ்வரத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையால் நகரின் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

Update: 2022-07-28 04:06 GMT

ராமேஸ்வரம்,

தமிழகத்தில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகின்றது. இதனிடையே ராமேஸ்வரம் பகுதியில் இன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக இடைவிடாமல் மிக பலத்த மழை பெய்தது.

பலத்த மழையால் கோவில் பேருந்து நிலையம் செல்லும் ராம தீர்த்த முதல் சீதா தீர்த்தம் திட்டக்குடி வரையிலான தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் தாழ்வான பல இடங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

Tags:    

மேலும் செய்திகள்