சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை

பிற்பகல் வரை வெப்பமான சூழல் நிலவி வந்தநிலையில் திடீரென வானிலை மாறி கனமழை பெய்தது.

Update: 2024-08-04 13:35 GMT

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு, கோவை, ராணிப்பேட்டை, தூத்துக்குடி, பெரம்பலூர் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, சென்னை மாநகர் மற்றும் புகறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கோயம்பேடு, மதுரவாயல், போரூர். வானகரம், ஐயப்பன்தாங்கல், ராமாபுரம், வளசரவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாக பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதேபோல், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில். இந்த திடீர் மழை வெப்பத்தை தணித்துள்ளது. குளிர்ச்சி சூழல் நிலவுவதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்