பலத்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

பூம்புகாரில் பலத்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி அழைந்தனர்

Update: 2022-12-22 18:45 GMT

திருவெண்காடு:

கடந்த 2 நாட்களாக பூம்புகார் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதோடு மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 10 நாட்களாக பனி அதிகரித்து காணப்படுவதால் சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்த மழையால் நெற்பயிரை தாக்கிய பூச்சிகள் அழியும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்