தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்;

Update: 2023-07-26 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் அருகே செங்குளத்தைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 33). கட்டிட தொழிலாளி. உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறிய முத்துராஜா, செங்குளம் கண்மாயில் உள்ள கருவேல மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கண்மாயில் ஆடு, மாடு மேய்க்க வந்தவர்கள் பார்த்து திருப்புவனம் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பிணத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்