விலைவாசி உயர்வை குறைக்க பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்: விக்கிரமராஜா பேட்டி

விலைவாசி உயர்வை குறைக்க ெபட்ேரால், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என கரூரில், விக்கிரமராஜா கூறினார்.

Update: 2023-02-16 18:30 GMT

மண்டல கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திண்டுக்கல் மண்டல கூட்டம் கரூரில் உள்ள ஒரு திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.

மின் கட்டணத்தை குறைக்கலாம்

கூட்டத்தில், நகராட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகளுக்கான அதிகப்படியான வாடகை விதிப்பு, முன் தேதியிட்டு வாடகை வசூலிப்பு போன்றவற்றை வரைமுறைப்படுத்தி நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும், வணிக கடைகளுக்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதையும், மின் கட்டணத்தையும் குறைக்க வேண்டும்,

தொழில் வரி செலுத்த காலதாமதத்திற்கு அதிகப்படியான அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. இதனை நிறுத்தி வைத்து கால அவகாசம் இல்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, டெக்ஸ்டைல் பார்க் சேர்மன் அட்லஸ் நாச்சிமுத்து, வி.கே.ஏ.சாமியப்பன், வி.என்.சி.பாஸ்கர், சோபிகா இம்பெக்ஸ் சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

பேட்டி

கூட்டம் முடிந்தவுடன் மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வருகிற மே மாதம் 5-ந்தேதி வணிகர்கள் மாநாடு உரிமை முழக்க மாநாடாக ஈரோட்டில் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் திண்டுக்கல், தேனி, கரூர், பழனி ஆகிய 4 ஊர்களில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.

ேபரணியாக ெசல்ேவாம்

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் லைசென்ஸ் என்பது 5 ஆண்டுக்கு ஒரு முறை என்பதை மத்திய அரசு ஒரு ஆண்டாக மாற்றி உள்ளது. இது அதிகாரியின் சூழ்ச்சியாக தான் நாங்கள் பார்க்கிறோம். எனவே மத்திய அரசு அதை உடனடியாக திரும்ப பெறுவதுடன் மீண்டும் 5 ஆண்டுக்கு ஒரு முறை என அமல்படுத்த வேண்டும். வணிக வரித்துறை அதிகாரிகள் வாகனத்தை சோதனை என்ற பெயரில் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இதை எல்லாம் பார்க்கும் போது வணிகத்தை விட்டு வெளியேறி விடலாமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. வணிகர் மாநாட்டில் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டிற்கு பிறகு மத்திய அரசு அந்த சட்டத்தை திரும்ப பெற வில்லையெனில் டெல்லியை நோக்கி பேரணியாக சென்று பிரதமர் மற்றும் துறை அமைச்சரிடம் புகார் மனு தர உள்ளோம்.

வரி விதிப்பை குறைக்க வேண்டும்

விலைவாசி உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து டீசல் பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், அதற்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம். ஜி.எஸ்.டி. வரி விதிப்பை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்