விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல்லில், இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.;
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் எனது தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.