திருப்பத்தூரில் பிரமாண்ட கலெக்டர் அலுவலகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் கட்டப்பட்ட பிரமாண்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Update: 2022-06-29 00:31 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் அதைத்தொடர்ந்து திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் டான்போஸ்கோ பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தும், பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்குகிறார்.

காலை ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திருப்பத்தூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருகிறார். அங்கு அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும், குத்துவிளக்கு ஏற்றியும், கலெக்டர் அறையில் அமர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறார். அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மைதானத்திற்கு முதல்-அமைச்சர் சென்று பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசுகிறார்.

திறப்பு விழாவையொட்டி கலெக்டர் அலுவலகம் வண்ண மின்விளக்குகள் அலங்காரத்தால் ஜொலிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்