அரசு ஊர்தி ஓட்டுனர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்

கல்வி தகுதி அடிப்படையில் அரசு ஊர்தி ஓட்டுனர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-09-18 18:45 GMT

கொரடாச்சேரி:

கல்வி தகுதி அடிப்படையில் அரசு ஊர்தி ஓட்டுனர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க மாவட்ட தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையர்களாக வேல்முருகன், பிரபாகரன் மற்றும் துணை ஆணையர்களாக நமச்சிவாயம், முரளி ஆகியோர் பங்கேற்று தேர்தலை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வன்னியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கனக ராமசாமி, பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. இதில் மாவட்ட துணைத்தலைவர் சரவணன், துணை செயலாளர் மதியழகன், அமைப்பு செயலாளர் கோகிலராமன், கொள்கை பரப்பு செயலாளர் மூவேந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் அற்புதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பதவி உயர்வு

அரசு ஊர்தி ஓட்டுனர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓட்டுனராக பணியாற்றி 10 ஆண்டுகள் முடித்த ஓட்டுனர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்காலிக ஓட்டுனர்களை நிரந்தரமாக்க வேண்டும். ஊர்தி ஓட்டுனர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்