தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை...மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - தமிழ்நாடு அரசு

மாணவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்.

Update: 2024-06-29 12:59 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்வதற்கான இணையதள கலந்தாய்வு தற்போது 28.06.2024 உடன் நிறைவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி தற்போது 8ம் மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை 01.07.2024 முதல் 15.7.2024 வரை இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது.

மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம் . சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 80% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அறிய வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்