கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி சாம்பியன்

கல்லூரிகளுக்கு இடையிலான மேலாண்மை போட்டியில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Update: 2023-04-06 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில், பல்வேறு கல்லூரிகளுக்கு இடையிலான மேலாண்மை போட்டி நேற்று நடந்தது. மேலாண்மை துறை தலைவர் அமிர்த கவுரி வரவேற்று பேசினார். அவர் பேசுகையில், ''மாணவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்த இதுபோன்ற போட்டிகள் சிறந்த வாய்ப்பாக அமைகிறது'' என்றார்.

தொடர்ந்து சிறந்த மேலாளர், வணிக வினாடி-வினா, லோகோ உருவாக்குதல், ஊமை விளக்கப்படம், புதிய பொருள் தயாரிப்பு வெளியீடு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் கேடயம், சான்றிதழை மேலாண்மை துறை தலைவர் அமிர்த கவுரி வழங்கினார். மேலாண்மை துறை துணை பேராசிரியர் உதயா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்