கவர்னர் ஆர்.என்.ரவி நாளை கன்னியாகுமரி செல்கிறார்..!

கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (திங்கட்கிழமை) கன்னியாகுமரி செல்கிறார்.

Update: 2023-07-23 05:49 GMT

குமரி,

இரண்டு நாட்கள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (ஜூலை 24) கன்னியாகுமரி செல்கிறார். நாளை மாலை கன்னியாகுமரிக்கு செல்லும் அவர், சூரிய அஸ்தமனக் காட்சியைக் கண்டு ரசிக்கிறார். அதன்பின்னர், நாளை இரவு கன்னியாகுமரியில் தங்குகிறார்.

நாளை மறுநாள் (ஜூலை 25) விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்லும் ஆர்.என்.ரவி அங்கு தியானம் செய்கிறார். பின்னர் பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆகியவற்றுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

தொடர்ந்து, விவேகானந்தா கேந்திராவுக்குச் செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, கேந்திரா வளாகத்தில் உள்ள பாரத மாதா கோயில், ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சியைப் பார்வையிடுகிறார். மதியம் 2 மணியளவில் அவர் சென்னைக்கு புறப்படுகிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்