அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் தர்ணா

அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் தர்ணா

Update: 2022-08-08 20:51 GMT

அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களின் பணி நேரத்தை நீட்டிக்கும் அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். இதில், பல்வேறு இடங்களில் பணியாற்றிய ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதுகுறித்து, மாநில தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான பணி நேரம் பல வருடங்களாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி என்றிருக்கிறது. தற்போது, அந்த பணி நேரத்தை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என்று மாற்ற அரசு கருத்துரு சமர்பித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. பணி நேரத்தை அதிகரிப்பது மருத்துவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காலை 8 மணிக்கு கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்வது சிரமம். இதுபோன்று பல்வேறு சிரமங்கள் இருக்கிறது. இதனால், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களின் பணி நேரத்தை அதிகரிக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்