தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது.

Update: 2022-07-28 04:56 GMT

சென்னை,

உக்ரைன் - ரஷியா போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

இந்நிலையில் தங்கத்தின் விலை 4-வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.38,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 32 ரூபாய் உயர்ந்து ரூ4,767-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் ஒரு கிராம் ரூ.4767ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 காசுகள் உயர்ந்து, ரூ.61.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.61,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்