தினமும் தூக்க மாத்திரை கொடுத்து மகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய் உள்பட 8 பேர் கைது

தினமும் தூக்க மாத்திரை கொடுத்து பெற்ற மகளையே விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-17 21:07 GMT


தினமும் தூக்க மாத்திரை கொடுத்து பெற்ற மகளையே விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

13 வயது சிறுமி

மதுரையை சேர்ந்த 13-வயது சிறுமி, தனது பாட்டியுடன் வந்து தல்லாகுளம் மகளிர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், தனது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே எனது தாயார் என்னை வளர்க்க முடியாமல் தந்தை வழி பாட்டி பராமரிப்பில் விட்டு சென்றார். நான் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தேன். இந்த நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு என்னை பார்க்க வந்த தாயார் அவருடன் என்னை ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு எனது பெரியம்மா, சித்தி, அவர்களின் மகன் இருந்தனர்.

அப்போது அவர்கள் எனக்கு தெரியாமல் தூக்க மாத்திரை கொடுத்து, நான் தூங்கிய பிறகு என்னை சிலரை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளனர். எனது உடலில் சிலர் சிகரெட் சூடு வைத்தனர். மேலும் புவனேஷ் என்பவர் போலீசில் புகார் செய்தால் ஆசிட் வீசி கொலை செய்வேன், எனது ஆபாச படங்களை இணையத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி வந்த நான் இதுகுறித்து எனது பாட்டியிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.

தாய் உள்பட 8 பேர் கைது

இது குறித்து போலீசார் விசாரித்த போது, 13 வயது சிறுமியை பணத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்தியதும், அதற்கு அவரது தாய் மற்றும் சித்தி, பெரியம்மா உள்பட 8 பேர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தாய், அவரது சித்தி, பெரியம்மா மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அருண், புவனேஷ், சேகர், மணிகண்டன் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பணத்திற்காக பெற்ற மகளையே தாய் விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்