பட்டுக்கூடு மகசூலில் சாதனை படைத்த விவசாயிகள் கலெக்டர் பரிசு வழங்கினார்

பட்டுக்கூடு மகசூலில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்

Update: 2023-03-21 18:45 GMT

சிவகங்கை 

சிவகங்கை மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்ற 3 விவசாயிகளுக்கு ரொக்க பரிசுத்தொகைகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

விவசாயிகள்

சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்த்து அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்றும், இதில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 15 ஆயிரம் என்றும் அறிவிக்கபட்டு இருந்தது.

அதனைடிப்படையில், காளையார்கோவில் வட்டம், சாத்தனி கிராமத்தில் குமார் என்ற விவசாயி ஒரு ஏக்கர்; பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்று முதல் இடத்ததை பெற்றார்.

பரிசு தொகை

இதேபோல் சிவகங்கை வட்டம், கூத்தாண்டண் கிராமத்தை சேர்ந்த அமுதாராணி என்ற விவசாயி இரண்டாம் இடத்தையும் காளையார்கோவில் வட்டம், சாத்தனி கிராமத்தை சேர்ந்த ராமைய்யா என்ற விவசாயி மூன்றாம் இடத்தை பெற்றார்.

இதையொட்டி அவர்களுக்கு பரிசு தொகையை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் உடனிருந்தார்

Tags:    

மேலும் செய்திகள்