ஜெனிவா ஒப்பந்த தின விழா ஊர்வலம்

திருவாரூரில் நடந்த ஜெனிவா ஒப்பந்த தின விழா ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-22 18:45 GMT

திருவாரூரில் நடந்த ஜெனிவா ஒப்பந்த தின விழா ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம்

திருவாரூர் புதிய ரெயில் நிலையத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் திருவாரூர் மாவட்ட கிளை, ஜூனியர் ரெட்கிராஸ் மற்றும் யூத் ரெட்கிராஸ் இணைந்து ஜெனிவா ஒப்பந்த தின விழா ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர்; சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரெட்கிராஸ் இயக்கம் என்பது ஓர் அகில உலக சேவை அமைப்பாகும், போர் காலத்தில் காயமுற்றோருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவ உருவாக்கப்பட்டது. நாளடைவில் பேரிடர் காலங்களிலும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி புரிந்து வருகிறது.

மனித நேய சட்டங்கள்

ரெட்கிராஸ் இயக்கம் உருவாக்கிய மனித நேய சட்டங்கள் 1949-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ந் தேதி; 200 உலகநாடுகள் கையெழுத்திட்ட ஜெனிவா ஒப்பந்தங்களாக வடிவம் பெற்றது. உலகநாடுகளில் உள்ள அனைத்து ரெட்கிராஸ் சங்கங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஜெனிவா ஒப்பந்த தினம் கொண்டாடி வருகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த ஊர்வலம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பனகல் சாலை, தெற்று வீதி வழியாக சென்று நகராட்சி அலுவலகம அருகில்; வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில் ரெட்கிராஸ் அமைப்பினை சேர்ந்த 500 பேர் கலந்து கொண்டனர். இதில் உதவி கலெக்டர் சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, தாசில்தார் நக்கீரன், ரெட்கிராஸ் தலைவர் ராஜகுமார், செயலாளர் வரதராஜன், பொருளாளர் பாலு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்; செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்