11 ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் வாகனம்

தியாகதுருகம் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் வாகனம் ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்;

Update: 2023-03-17 18:45 GMT

தியாகதுருகம்

தூய்மை பாரதம் திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.30 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 11 ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் ந.தாமோதரன், துணை தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டு குப்பை சேகரிக்க பேட்டாரியால் இயங்கக்கூடிய 11 வாகனங்களை புது உச்சிமேடு, தியாகை, எஸ்.ஒகையூர், சின்னமாம்பட்டு, கொங்கராயபாளையம், வடதொரசலூர், எறஞ்சி, பீளமேடு, குருபீடபுரம், கொட்டையூர், மடம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்களிடம் வழங்கி கொடியசைத்து அனுப்பி வைத்தனர். இந்த வாகனங்களின் மூலம் கிராமங்களில் தூய்மை பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்முருகன், சீனிவாசன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொளஞ்சி வேலு, தயாபரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்