கொட்டாம்பட்டி அருகே விநாயகர் சிலைகள் ஊர்வலம்
கொட்டாம்பட்டி அருகே விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் இந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுபட்டி, ஆலம்பட்டி, கணேஷ்புரம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் அலங்கரிக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பா.ஜனதா சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆர்.எஸ்.எஸ் மாவட்ட இணை செயலாளர் வீரகுமார் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். சுற்றுச்சூழல் பொறுப்பாளர் அழகேசன், நிர்வாக குழு தலைவர் அன்பு, பா.ஜனதா இளைஞர் அணி ஒன்றிய தலைவர் வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துவராபதி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் தொடங்கி பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த 20-க்கும் மேற்பட்ட சிலைகள் இணைந்து திண்டுக்கல் சாலை வழியாக ஊர்வலமாக சென்று துவராபதி அம்மன் கோவில் குளத்தில் கரைக்கபட்டன.