தண்டுபத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

தண்டுபத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-08-11 18:45 GMT

உடன்குடி:

பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு உடன்குடி, திருச்செந்தூர் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தண்டுபத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு உடன்குடி ஒன்றிய தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர்நகர தலைவர் வி.பால்ராஜ், உடன்குடி நகரதலைவர் பி.பால்ராஜ்ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார் வரவேற்று பேசினார். மாநிலஅமைப்பாளர் சசிகுமார், மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினா். வருகிற செப்.21-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, தினமும் பூஜைகள் செய்து வழிபடுவது என்றும், மறுநாள் அனைத்து சிலைகளையும் உடன்குடியில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று தைக்காவூர், தண்டுபத்து, பரமன்குறிச்சி காயாமொழி, தளவாய்புரம் வழியாக திருச்செந்தூர் அய்யா நாரயணசுவாமி கோவில் அருகில் உள்ள கடலில் விஜர்சனம் செய்வது என முடிவு செய்யப்பட்டது,

Tags:    

மேலும் செய்திகள்