சதுரகிரியில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

சதுரகிரி கோவிலில் பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2022-12-07 19:27 GMT

வத்திராயிருப்பு, 

சதுரகிரி கோவிலில் பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பவுர்ணமி தரிசனம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ேகாவிலில் நேற்று கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

வனத்துறை கேட் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மழைக்கான எச்சரிக்கை இருந்ததால் காலை 10 மணிக்கு வனத்துறை கேட் மூடப்பட்டது. அதன் பின் வருகை தந்த பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கவில்லை.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி, தேன் உள்பட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், பவுர்ணமி சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாட்டையும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்