பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு வழங்க இலவச சைக்கிள் தயார்

மாவட்டத்தில் 12 ஆயிரத்து மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-07 19:00 GMT

நாமக்கல்:-

அரசு பள்ளிகளில் பிளஸ்-1படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் இலவச சைக்கிள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 12,969 இலவச சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இந்த சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே பள்ளிகளில் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பொருத்தும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் நகரை பொறுத்த வரையில் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் 1,000 சைக்கிள்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. விரைவில் இந்த சைக்கிள்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்