அரசினர் குழந்தைகள் இல்ல மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்ல மாணவர்கள் 34 பேருக்கு இலவச சைக்கிள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.
இலவச சைக்கிள்
ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் சிறுவர்ககளுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆதரவில்லாத சிறுவர்கள் இங்கு தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க விளையாட்டு, யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் இல்லத்தில் தங்கியுள்ள 34 மாணவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி விருப்ப நிதியிலிருந்து ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் நிதி ஒதுக்கி அதன் மூலம் நேற்று மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டன.
அமைச்சர் காந்தி வழங்கினார்
அதே போல் கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. குழந்தைகள் இல்ல வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி கலந்துகொண்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலெக்டர் வளர்மதி, நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், நகரமன்ற துணைத்தலைவர் ரமேஷ்கர்ணா மற்றும் பலர் பங்கேற்றனர்.