ராஜேந்திரபாலாஜியின் தந்தை உடலுக்கு முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி

ராஜேந்திரபாலாஜியின் தந்தை உடலுக்கு முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2023-04-18 19:47 GMT

சிவகாசி,

ராஜேந்திரபாலாஜியின் தந்தை உடலுக்கு முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் அஞ்சலி

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான கே.டி. ராஜேந்திரபாலாஜியின் தந்தை கே.தவசிலிங்கஆசாரி (வயது 93). இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக திருத்தங்கல் பாலாஜிநகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

உடல் அடக்கம்

தவசிலிங்க ஆசாரி உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்,உறவினர்கள், நண்பர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், அனைத்து கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து நேற்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்