மாமல்லபுரத்தில் கற்சிற்பம் செதுக்கும் பணியில் ஆர்வம் காட்டும் வெளிநாட்டு பயணிகள்

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு சிற்ப கலைஞர்கள் பல்லவ மன்னர்களின் காலத்தில் உருவான கற்சிற்பங்களை கண்டு வியந்தனர். மேலும் 3 மாத காலம் முகாமிட்டு சிற்பம் செதுக்கும் பயிற்சியை பெற முடிவு எடுத்துள்ளனர்.

Update: 2023-01-26 09:38 GMT

பார்த்து வியந்தனர்

சுவீடன் நாட்டை சேர்ந்த சிற்பக்கலைஞர் ஸ்டெபனோ (வயது 80), இவர் ஐரோப்பா நாடுகளின் சிற்பக்கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவராக உள்ளார். இவருடைய தலைமையில் இத்தாலி, ஜெர்மனி, சுவீடன், டென்மார்க், நார்வே, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் 10 பேர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு மாநிலங்களுக்கு சென்ற இவர்கள் பல இடங்களில் உள்ள கலைச்சின்னங்களை சுற்றிப்பார்த்துவிட்டு, பின்னர் மாமல்லபுரம் வந்தனர். அங்குள்ள கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம் போன்ற பல்லவ மன்னர்களின் காலத்தில் உருவான சிற்பங்களை பார்த்து வியந்தனர்.

3 மாத கால பயிற்சி

இவர்களுக்கு இதுபோன்ற பல்லவர் கலைப்பாணி சிற்பங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. இதனை அடுத்து மாமல்லபுரத்தில் புகழ்பெற்ற முன்னாள் அரசு சிற்பக்கலைக்கல்லூரி கற்சிற்ப பிரிவு பேராசியர் சிற்பி பாஸ்கரன் என்பவரிடம் தங்கள் ஆர்வத்தை வெளிநாட்டு பயணிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்தபதி த.பாஸ்கரன் சுவீடன் நாட்டு கலைஞர் ஸ்டபனோ உதவியுடன் தனது சிற்பக்கலைக்கூடத்தில் வெளிநாட்டு கலைஞர்கள் 10 பேருக்கு முதற்கட்டமாக 3 மாத காலம் கருங்கல், பச்சைக்கல், கிரானைட் கற்களில் சிற்பம் செதுக்கும் பயிற்சியை நேற்று தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை இயக்குனர் செ.ரா.காந்தி கலந்து கொண்டு கற்சிற்பம் செதுக்க ஆர்வமுடன் பயிற்சி எடுக்கு வந்துள்ள வெளிநாட்டு பயணிகளை தமிழக கலாச்சாரப்படி சால்வை அணிவித்து வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்