அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தயார்

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனா

Update: 2022-11-13 18:30 GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருதால் கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்ளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தற்போது அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கை எதிர்நோக்கும் வகையில் கரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் தலைமையில், 30 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், அவர்கள் ஆற்றில் யாரேனும் மூழ்கினால் அவர்களை மீட்கும் பணியின்போது பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உபகரணங்களான பைபர் படகு, தண்ணீர் மூலம் வெளிவரும் பாம்புகளை பிடிக்கும் கருவிகள், லைப் ஜாக்கெட், நீர் இறைக்கும் பம்பு ஆம்புலன்ஸ்களையும், தீயணைப்பு ஊர்திகளையும் கரூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு படைவீரர்கள் தயார் படுத்தி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்