ஆண்டாள் கோவிலில் நாளை கொடியேற்றம்

ஆண்டாள் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 1-ந் தேதி ேதரோட்டம் நடக்கிறது.

Update: 2022-07-22 19:32 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஆண்டாள் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 1-ந் தேதி ேதரோட்டம் நடக்கிறது.

கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது. இந்த திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆண்டாள் கோவில் தேரின் மேல் பகுதியில் இதுவரை மூங்கில் கொண்டு கொடுங்கைகள் இருந்தன. இதையடுத்து இரும்புகளை கொண்டு கொடுங்கை புதிதாக அமைக்க நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த கொடுங்கைகளை ராஜபாளையம் ராம்கோ நிறுவனம் சார்பில் அமைத்து தர முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அந்த கொடுங்கைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வரப்பட்டு தேரில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இரும்பு பட்டை

இதுகுறித்து ஆண்டாள் கோவிலை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆண்டாள் கோவில் தேரில் இதற்கு முன்பு இருந்த கொடுங்கைகள் மூங்கிலால் ஆனது. இதனை அடிக்கடி மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது ராம்கோ நிறுவனத்தினர் இரும்பினால் ெகாடுங்கைகளை செய்து கொடுத்துள்ளது. அது பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது பல ஆண்டுகளுக்கு சேதமடையாமல் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்