ஆலத்துடையான்பட்டியில் மீன்பிடி திருவிழா - ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-07-10 04:28 GMT

உப்பிலியபுரம்,

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, புளியஞ்சோலை அய்யாற்றை நீராதாரமாக கொண்டு அமைந்துள்ள ஆலத்துடையான்பட்டி ஏரி, சின்ன ஏரி, பெரிய ஏரி என இரு பகுதிகளாக அமைந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக பெய்த தொடர் மழையால் ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை.

இந்த நிலையில் ஆற்றின் நீர்வரத்து குறைந்ததால் ஏரியில் நிர்மட்டம் வற்றும் நிலை ஏற்பட்டது. இதனால் ஏரயில் மீன்பிடி திருவிழா நடத்துவற்கு கிராம மக்கள் ஏற்படுசெய்தனர். அதன்படி இன்று காலை 7 மணியளவில் ஏரியில் மீன்பிடி திருவிழா தொடங்கியது.

இந்த திருவிழாவில் ரெட்டியாப்பட்டி, சிறுநாவலூர், கருப்பம்பட்டி, கே.எம்.புதூர், எஸ்.என்.புதூர், பாலகிருஷ்ணம்பட்டி, சீத்தக்காடு, கல்லாங்குத்து, பச்சபெருமாள்பட்டி, தங்கநகர், ஆர்.கோம்பை உள்ளிட்ட சுற்று வட்டாரத்திலுள்ள கிராமத்திலிருந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு வருடமாக மீன்பிடி திருவிழா நடைபெறாத நிலையில் ஒவ்வொரு மீனும் 10 கிலோ எடை கொண்டதாக பெரிய அளவில் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன்பிடித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்