'கச்சத்தீவை மீட்டுவிட்டால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்' - துரை வைகோ

கச்சத்தீவை மீட்டுவிட்டால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.;

Update:2024-09-05 23:50 IST

சென்னை,

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-

"கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரம் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். அதில் 500 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் மீனவர்கள் மீதான தாக்குதலின் வீரியம் அதிகரித்துள்ளது.

கடந்த 8 மாதங்களில் 320-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சத்தீவை மீட்டுவிட்டால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஆனால் இலங்கை அரசு ஒருபோதும் கச்சத்தீவை திருப்பி தராது."

இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார். 

Full View


Tags:    

மேலும் செய்திகள்