வெயிலுகந்த விநாயகர் கோவிலில் தீமிதி திருவிழா
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
ஆர்.எஸ்.மங்கலம்,
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விநாயகர் சதுர்த்தி
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூரில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி தினமும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 29-ந் தேதி விநாயகர் சித்தி, புத்தி திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான உப்பூர் கிருஷ்ணன் மண்டகபடியார் நிகழ்ச்சியில் விநாயகர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காலை 9 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி விநாயகர் வெள்ளி ரதத்தில் உப்பூர் கடற்கரைக்கு எழுந்தருளினார். பின்னர் கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் அங்கிருந்து பக்தர்கள் புடைசூழ கோவிலுக்கு வந்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிறப்பு அபிஷேகம்
பகல் 12 மணிக்கு ராமநாதபுரம் தேவஸ்தானம் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு சேதுபதி மகன் நாகேந்திரன் சேதுபதி, தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. வெட்டுக்குளம் வாசுதேவன் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் விநாயகர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்்தார். இரவு 10 மணிக்கு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது.
விழாவில் தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார், உப்பூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், வெட்டுகுளம் வாசுதேவன், எம்.எஸ்.உணவகம் கணேசன், உப்பூர் குமரய்யா, கடலூர் முன்னாள் ஊராட்சி தலைவர் குஞ்சரம் கிருஷ்ணன், ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ஹரிராம், பாரனூர் கூட்டுறவு சங்க தலைவர் உப்பூர் கிருஷ்ணன், செயலாளர் விசுவநாதன், இயக்குனர்கள் மீனாம்பாள், பஞ்சவர்ணம், காரசுந்தரி, கணேசன், சோமசுந்தரம், மணிகண்டன், ஆனந்தன், ராதா, முதல்நிலை எழுத்தாளர் செல்வம், உதவியாளர் கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம் வட்டார காங்கிரஸ் தலைவர் (தெற்கு) மயிலூரணி சுப்பிரமணியன், ஆர்.எஸ்.மங்கலம் தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் தன.மதிவாணன், சாந்தி டிரேடர்ஸ் உரிமையாளர் செல்லத்துரை, நாகனேந்தல் முருகானந்தம், அ.தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் திவாகரன், காவனூர் ஊராட்சி தலைவர் கவுதமி திவாகரன், மேலச்சேந்தனேந்தல் எல்.ஐ.சி. முகவர் ரவீந்திரன், கடலூர் ஊராட்சி தலைவர் முருகவள்ளிபாலன், துணைதலைவர் சேவியர், ஊராட்சி உறுப்பினர்கள் பாண்டித்துரை, தமிழரசி, வைரம்பாள், மஞ்சுளா, கலைஞர்ராணி, ராஜேஸ்வரி, இளங்கோவன், அழகப்பன், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன், நாகனேந்தல் நீர்பாசன சங்கத்தலைவர் விஸ்வநாதன், செம்புலாங்குடி ராமு, உப்பூர் சத்திரம் நாகநாதன், தமிழரசன், பாலு, அஜய் கணேசன், கீழசித்தூர்வாடி செல்வம், கருப்பையா, சண்முக பிரியா பில்லிங் ஸ்டேஷன் சர்வேயர் காந்தி, அடர்ந்தனார் கோட்டை மணிகண்டன், ஸ்ரீ ராஜலட்சுமி ஐயங்கார் பேக்கரி பணியாளர்கள், பிரியம் பேன்சி ஸ்டோர் பணியாளர்கள், மோனிஷா, உஷா, வளமாவூர் ஆறுமுகம், முருகன் பூசாரி, அமிர்தா மெட்ரிக் பள்ளி தாளாளர் அன்புமலர்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் திருவாடானை சரக பொறுப்பாளர் பாண்டியன், கோவில் விசாரணைதாரர் முருகன், சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.