மில்லில் தீ விபத்து

சிவகாசி தொழிற்பேட்டையில் உள்ள துணி மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-07-08 19:54 GMT

சிவகாசி, 

சிவகாசி தொழிற்பேட்டையில் உள்ள துணி மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து

சிவகாசி தொழிற்பேட்டையில் சந்திரபிரகாஷ் (வயது 64) என்பவருக்கு சொந்தமான மில் உள்ளது. இங்கு துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்றும் வழக்கம்போல் துணி உற்பத்தி நடைபெற்றுள்ளது.

இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மின்கசிவு காரணமாக எந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கிருந்த கழிவுகளில் தீ மள, மளவென பரவியது. இதில் கழிவுகள் அனைத்தும் எரிந்து நாசமானது.

 மண்டலம்

இந்த விபத்தில் எந்திரமும் எரிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். சம்பவ இடம் புகைமண்டலமாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.

பின்னர் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்