மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரருக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் நிதியுதவி

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரருக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் நிதியுதவி அளித்தார்

Update: 2023-03-22 18:45 GMT

சாயல்குடி,

கடலாடி அருகே கீழச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி 20-ந் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற்ற உலகக்கோப்பை சக்கர நாற்காலி போட்டியில் கேப்டனாக வினோத் பாபு விளையாடினார். இறுதிப்போட்டிக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் களமிறங்கின. இந்தியா ஆசிய கோப்பையை கைப்பற்றியது. மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட வினோத் பாபுவிற்கு சிறந்த ஆட்டக்காரருக்கான விருது மற்றும் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தமைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் 26-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகக்கோப்பை சக்கர நாற்காலி போட்டியில் இந்தியா, வங்காளதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டியில் இந்தியா சார்பில் வினோத் பாபு தலைமையில் இந்திய அணி கலந்து கொள்ள உள்ளது வறுமையில் வாடும் வினோத் பாபு லண்டன் செல்ல அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் உதவி அளிக்குமாறு கேட்டார். அமைச்சர் ராஜ கண்ணப்பன் வழங்கிய நிதியை கீழச்செல்வனூர் கிராமத்தில் உள்ள வினோத் பாபு வீட்டிற்கு சென்று கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல். முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், ஆகியோர் வழங்கினார். இந்நிகழ்வின் போது முன்னாள் கீழச்செல்வனூர் ஊராட்சி தலைவர் முருகன், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி மாரிநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்