ஊருணியில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

ஊருணியில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் நிதியுதவி வழங்கினார்

Update: 2023-03-20 18:45 GMT

எஸ்.புதூர்,

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே படமிஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊருணியில் குளிக்க சென்ற அதே கிராமத்தை சேர்ந்த லெட்சுமணன் மகன்கள் மகேந்திரன் (7), சந்தோஷ் (5), நாகராஜ் மகள் யாமினி என்ற மீனாட்சி (10) ஆகியோர் கடந்த ஊருணியில் மூழ்கி உயிரிழந்தனர்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சத்தினையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று வழங்கி குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சிங்கம்புணரி தாசில்தார் சாந்தி, உலகம்பட்டி ஊராட்சி தலைவர் சியாமளா கருப்பையா உள்பட பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்