கடின உழைப்பால் போராடி வெற்றி பெறுங்கள் - நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை
நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளா
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்ற இந்த நீட் தேர்வை, நாடு முழுவதும் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதன்படி, இந்த தேர்வில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது ;
நீட் தேர்வில் வெற்றி பெறாத தேர்வாளர்கள் தற்காலிக பின்னடைவை மேம்பட்ட உத்திகள், வலுவான உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் போராடி வெற்றி பெறவும், மாணவர்கள் பயப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.