திருத்தளிநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

திருத்தளிநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2022-06-07 18:44 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் சிவகாமி உடனமர் திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழாவையொட்டி சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருத்தளிநாதர் கோவில்

திருப்பத்தூர் சிவகாமி உடனமர் திருத்தளிநாதர் சுவாமி கோவிலில் வைகாசிப் பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 3-ந்தேதி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டு ெதாடங்கியது. இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது.

2-ம் திருநாள் முதல் 8-ம் திருநாள் வரை சுவாமி பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி சாமி திருவீதி உலா நடந்தது.. தொடர்ந்து சோழிய வெள்ளாளர் உறவின் முறையினர் சார்பில் தென்மாபட்டு வேலாயுதசாமி மடத்திலிருந்து கல்யாண சீர்வரிசை எடுத்து வரப்பட்டு திருநாள் மண்டபத்தில் வைக்கப்பட்டது.

திருக்கல்யாணம்

பின்னர் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க 10.20 மணியளவில் திருத்தளிநாதர் சுவாமிக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருப்பூட்டு வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ராமேசுவரன், மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல்கள் வழங்கப்பட்டது. இரவு 9 மணியளவில் யானை வாகனத்தில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை 5-ம் நாள் மண்டகப்படியார்கள் திருப்பத்தூர் சோழிய வெள்ளாளர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்