கோவில்பட்டி: குடிபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை - போலீஸ் வலைவீச்சு
கோவில்பட்டி அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள காட்டு ராமன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 55). கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.
இவரது இளைய மகன் முத்துக்குமார் (வயது 27). இவர் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 8.30 மணியளவில் முத்துக்குமார் குடிபோதையில் அரிவாளுடன் வந்து தந்தை முத்துராஜிடம் தகராறு செய்து, அறிவாளால் வெட்ட முயன்றுள்ளார். சுதாரித்துக் கொண்ட முத்துராஜ், முத்துக் குமாரிடமிருந்து அருவாளை பிடுங்கி, அவரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியானார். இதனால் அதிர்ச்சி யடைந்த முத்துராஜ் தப்பி ஓடி விட்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், நாலாட்டின் புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துக்குமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
முத்து குமார் கொலை தொடர்பாக அவரது தந்தை முத்துராஜை தேடி வருகிறார்கள். தந்தையே மகனை வெட்டி கொலை சேய்த சம்பவம் காடாடு ராமன் பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.