தோட்டக்கலைத்துறையில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தோட்டக்கலைத்துறையில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-12 18:38 GMT

கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதமர் மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், மானாவாரி பகுதி மேம்பாடு, மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேடன் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது இத்திட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான பழங்கள், காய்கறிகள், மலர்கள், சுவை தானிய பயிர்கள் ஆகியவற்றின் பரப்பு விரிவாக்கம் வாழையின் ஊடுபயிர் சாகுபடி அங்கக வேளாண்மை துள்ளிய பண்ணை திட்டம், காளான் வளர்ப்பு, பந்தல் சாகுபடி, ஒருங்கிணைந்த பண்ணையம், தோட்டக்கலை கருவிகள், நுண்ணீர் பாசனம் அமைத்தல், மற்றும் துணை நீர் மேலாண்மை போன்றவற்றிற்கு நடப்பு நிதி ஆண்டில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் அதற்காக தோட்டக்கலை துறையின் https//tnhorticulture.tn.gov.in/tnhortned என்ற இணையதள மூலம் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் உள்ள மானிய விண்ணப்பத்தில் விவசாயியின் பெயர், முகவரி, ஆதார் எண், கிராமம், வட்டாரம், மாவட்டம் ஆகிய விபரங்களை பூர்த்தி செய்தல் வேண்டும். மேலும் தங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். விவசாயியின் புகைப்படத்தை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்தவுடன் குறுஞ்செய்தி விவசாயிகள் தொலைபேசிக்கு வந்தடையும். இணைய வழியில் பதிவு செய்ய இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம். என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சுரேஷ் ராஜா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்