வேளாண் சங்கமம் கண்காட்சியில் விவசாயிகள் கலந்து கொள்ள அழைப்பு

வேளாண் சங்கமம் கண்காட்சியில் விவசாயிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-25 20:07 GMT

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருச்சியில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை 3 நாட்கள் வேளாண் சங்கமம் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் வேளாண்மையை எளிமைப்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள், வருமானத்தை பெருக்குவதற்கான வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டு தொழில்நுட்பங்கள், பாரம்பரிய மரபுசார் தொழில் நுட்பங்கள், நவீன வேளாண் எந்திரங்கள், பாரம்பரிய நெல் மற்றும் பிற பயிர் ரகங்கள், பாரம்பரிய உணவு அரங்குகள், வேளாண் மானிய உதவி பெற முன்பதிவு, விவசாயிகள் கருத்தரங்கு, விவசாயிகள்-விஞ்ஞானிகள் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. எனவே, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் தகவலுக்கு அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்