மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி விவசாயி பலி

அத்தனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி விவசாயி இறந்தார்.;

Update:2023-10-03 00:18 IST

வெண்ணந்தூர்

விவசாயி

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது 45). அதேபகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (45). இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஏழுமலை லாரி வாங்குவதற்காக வேலுமணியை நாமக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்து நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலை அத்தனூர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்ற சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஏழுமலை, வேலுமணி இருவரும் படுகாயம் அடைந்தனர். அதைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார்.

பலி

பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவரை தேடி வருகின்றனர். இறந்த ஏழுமலைக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், ஜெயப்பிரகாஷ் என்ற மகனும், மதுபிரியா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்